நடிகை சாய் பல்லவி அறிமுகமான ப்ரேமம் படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானவர் தான் இந்த சுருட்டை முடி அழகியான, அனுபமா பரமேஸ்வரன்.
மலையாளத்தை தொடந்து, தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கொடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார், அனுபமா பரமேஸ்வரன்.
தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர்களுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த, படங்கள் ஆரம்பத்தில் வெற்றிபெற வில்லை என்றாலும், தற்போது தெலுங்கில் முன்னணி இடத்தை கைப்பற்றியுள்ளார்.
தற்போது இவரின் கைவசம் தமிழில் சைரன் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் உள்ள நிலையில், பட வாய்ப்புகளை கைப்பற்ற விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி பட வேட்டை நடத்தி வருகிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலர் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்டை, அனுபமா காப்பி அடித்து, சற்று தூக்கலான கவர்ச்சியை காட்டியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.