மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி நாயகன் சரத் பாபுவா? வெளியான ஆச்சர்ய தகவல்!

First Published | May 24, 2023, 12:22 AM IST

உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நடிகர் சரத் பாபு, தான்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித நடித்த கடைசி படத்தின் ஹீரோ என்கிற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
 

மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகைமான ஜெயலலிதா.. கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிற ஆடை' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தாலும், ஜெயலலிதாவுக்கு ஜோடி என்று யாரும் இல்லை. ஜெயலலிதா ஸ்ரீகாந்த் மீது ஆசைப்பட்டாலும், அவர் வெண்ணிற ஆடை நிர்மலாவை தான் காதலிப்பார். எனவே இந்த படத்தில் ஜெயலலிதாவுக்கு கதாநாயகன் இல்லை.

இந்த படத்தை தொடர்ந்து அதே ஆண்டு, எம்ஜிஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். எனவே ஜெயலலிதாவின் முதல் ஜோடி எம்ஜிஆர் ஆவார்.  

ட்ராஸ்பரென்ட் உடையில்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்ருதிஹாசன்!
 

Tap to resize

ஜெயலலிதா உடன் முதல் முறையாக முதல் முதலாக ஜோடி போட்டது எம்ஜிஆர் ஆக இருந்தாலும், அவரின் கடைசி படத்தில் ஜோடியாக நடித்தவர் சரத்பாபு என்கிற ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி, ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

அதாவது கடந்த 1980 ஆம் ஆண்டு, ஜெயலலிதா அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர், கடைசியாக நடித்த திரைப்படம் என்றால் 'நதியை தேடி வந்த கடல்'. இந்த படத்திற்கு பின்னர் அதிமுகவில் காலடி எடுத்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்னர் முதல்வராகவும் மாறினார் என்பது அனைவரும் அறிந்ததே.

68 வயதிலும் ஃபேஷன் உடையில் அதிரவிடும் ஆண்டவர்! கமல்ஹாசனின் நியூ போட்டோ ஷூட் வைரல்!

ஜெயலலிதாவின் இந்த கடைசி படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சரத் பாபு தான். எனவே ஜெயலலிதாவின் முதல் ஹீரோ எம்ஜிஆர் என்றால்,  கடைசி ஹீரோ சரத்பாபு என்கிற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Latest Videos

click me!