உலகநாயகன் என்கிற வார்த்தைக்கு ஏற்ற போல், திரைப்படங்களிலும் சரி ஃபேஷனிலும் சரி இளம் நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து வருபவர் நடிகர் கமலஹாசன். இந்நிலையில் இவர் கதர் உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து துவங்கி உள்ள, ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் பிராண்டிகிற்காக, சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் கமலஹாசன் தற்போது திரைப்படங்களிலும், தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் படு பிசியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். சினிமாவில் கிடைத்த இடம், தற்போது வரை அரசியலில் நடிகர் கமலஹாசனுக்கு கிடைக்கவில்லை என்றாலும்... விடாப்பிடியாக தன்னுடைய அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்தி வருவதோடு, அவ்வபோது தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி, வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.
சாலை விபத்தில் சீரியல் நடிகை மரணம்! ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்லும் போது நடந்த பயங்க சம்பவம்!
மேலும் கடந்த சில வருடமாக நடிகர் கமலஹாசன் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த தயாரித்த 'விக்ரம்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
அதேபோல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் மீண்டும் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரவே... முழு வீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ஷங்கர் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளார்.
விரைவில் கமல்ஹாசனும் தன்னுடைய அடுத்த படத்திற்காக மணிரத்னத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அரசியல் - சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் கமலஹாசன், அவ்வப்போது தன்னுடைய தொழில் நிறுவனங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். அந்த வகையில் கதர் ஆடைகளுக்காக இவர் துவங்கிய ஹவுஸ் ஆஃப் காதர் ஆன்லைன் விற்பனை நிறுவனத்திற்கு. தற்போது கலக்கல் ஆன போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். வெள்ளை நிற உடையில் ஆங்காங்கு பெயிண்ட் தெளித்தது போல் இருக்கும் ட்ரெண்டிங் ஆன டிசைனில், பாலைவன பகுதிகளில், இரண்டு கறுப்பின மாடல்களுடன் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் படு வைரலாக பார்ப்பட்டு வருகிறது.
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா தி ரூல்' ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!