சாலை விபத்தில் சீரியல் நடிகை மரணம்! ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்லும் போது நடந்த பயங்க சம்பவம்!

First Published | May 23, 2023, 8:58 PM IST

29 வயதே ஆகும் சீரியல் நடிகை ஒருவர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பெங்காலி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் 29 வயதாகும் நடிகை சுசீந்திரா தாஸ் குப்தா. இவர் நேற்று வழக்கம்போல் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பாரா நகர், பகுதி  கோஸ் பாரா என்கிற இடத்தில் இவர் சென்று கொண்டிருந்த கார் சென்றுகொண்டிருந்த போது,  எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்... கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

எனவே ஓட்டுநர் ஓட்டுநர் திடீரென காரை நிறுத்துவதற்காக பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறிய சுசீந்திர தாஸ் குப்தா,  கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.  அந்நேரம் பார்த்து அவ்வழியாக வந்த லாரி ஒன்று திடீரென சுசீந்திர தாஸ் குப்தா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

எருமை சாணி விஜய்க்கு காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது..! வெளியான புகைப்படம்... குவியும் ரசிகர்கள் வாழ்த்து

Tap to resize

இந்த கோர சம்பவம் குறித்து சுசீந்திரா தாஸ் குப்தாவின் கணவர் கூறியபோது,  ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது, தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது என உறுதி செய்துள்ளார்.  இதைத்தொடர்ந்து இவரின் இறுதிச் சடங்குகள் பர்கானஸ் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

இளம் நடிகை ஒருவர், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலரும் சமூக வலைதள மூலம் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் இவருடன் நடித்த சீரியல் நடிகர், நடிகைகள் பலர்... நேரடியாக சென்று இவனுடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டயலாக் வரவில்லை... 10... 12.. டேக் போய்டுச்சு! தம் அடிக்க சொன்ன சரத்பாபு! ரஜினி பகிர்ந்த நினைவுகள்!

Latest Videos

click me!