தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். செம்மர கடத்தலையும், செம்மர கடத்தல் தொழிலாளர்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு, வெளியானது.
இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அதே போல் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார். மேலும் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்தில், 'ஓ சொல்றியா மாமா.. என்கிற ஐட்டம் சாங்க்கு திரையரங்கமே அதிரும் அளவுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி வேற லெவல் பர்ஃபார்மன்ஸ்சை வெளிப்படுத்தினார் நடிகை சமந்தா. ஹீரோயின் ராஷ்மிகா போட்ட கவர்ச்சி ஆட்டத்தையே மறக்க செய்தது, சமந்தாலும் இந்த கிளுகிளுப்பான நடனம்.
டயலாக் வரவில்லை... 10... 12.. டேக் போய்டுச்சு! தம் அடிக்க சொன்ன சரத்பாபு! ரஜினி பகிர்ந்த நினைவுகள்!
பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் சுமார் 350 கோடிக்கு மேல் வசூலித்து கெத்து காட்டியது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வரும், 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
மைத்ரேயி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 'புஷ்பா 2' திரைப்படம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி கடந்த ஆண்டு, கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியானதோ.. அதே போல் இந்த ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தை, புஷ்பா தி ரூல் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.