தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் நடித்ததை விட தற்போது திரைப்பிரபலங்கள் பற்றி வில்லங்கமான கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் தான் பிரபலமாகி உள்ளார். யூடியூப்பில் சினிமா பிரபலங்கள் பற்றி சில அந்தரங்க தகவல்களை வெளியிட்டு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.