cinema
ஸ்ருதிஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு பார்வை.
பிரான்ஸில் நடைபெறும் இந்த புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பிரபலங்கள் கலக்கி வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாக்கூர், எமி ஜாக்சன் போன்ற ஹீரோயின்கள் ஏற்கனவே பேஷன் உடை அணைந்து அதிரவைத்த நிலையில், தற்போது இதில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார்.
ஸ்ருதி கருப்பு உடையில் வேற லெவல் ஃபேஷன் உடையில் கேட் வாக் செய்த போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
கருப்பு உடைகளை அதிகம் விரும்பும் ஸ்ருதி ஹாசன், கேன்ஸ் விழாவில் பங்கேற்க கருப்பு உடையையே தேர்வு செய்துள்ளார்.
ட்ரான்ஸ்பரெண்டான கிளாசியான கவர்ச்சி உடையில்... பெரிய அளவிலான பூ ஒன்று இந்த உடையை அலங்கரித்துள்ளது.
பார்பவர்களையே வியக்க வைக்கும் அழகில், ஸ்ருதிஹாசன் தோன்றினார். ஸ்ருதியின் இந்த ட்ரெண்டி உடை, வேற லெவலுக்கு இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
குறிப்பாக அவர் உடையில்... ஃபைட்டர் பிஷ் டெயில் போல்... பிளாலெஸ்சாக இடப்பெற்றுள்ள பூ... ஸ்ருதியை மேலும் அழகாக காட்டுகிறது.
இவரின் அழகை படம் பிடிக்க பிரான்ஸ் நாட்டு புகைப்பட கலைஞர்கள் பலர் போட்டி போட்டுளார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
மேலும் ஸ்ருதி ஹாசன், கேன்ஸ் பட விழாவில், சிவப்பு கம்பளத்தில் நடை போட்ட புகைப்படங்களைப் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதற்க்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்... கருப்பு உடை அணிந்த பூக்களின் தேவதை போல் இருக்கிறார் என... இவரின் அழகை தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.
இதற்க்கு முன்பு முன்பு ஸ்ருதி ஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடைபோட்டர்.
அப்போதும், கருப்பு உடையையே தேர்வு செய்திருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் 2023 ஆம் ஆண்டு கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.