கோலிவுட் திரை உலகில், லேடிஸ் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, 'ஐயா' படத்திற்கு முன்னர் பார்த்திபன் இயக்கி - நடித்த படத்தில், நடிக்க இருந்த நிலையில், அவரை பார்த்திபன் நடிக்க வேண்டாம் என ரிஜெக்ட் செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, திருமணமான நான்கே மாதத்தில்... வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் இவர், தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
இந்நிலையில் இவருடைய முதல் படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமானவர் என்பது நமக்கு தெரிந்திருந்தாலும், இந்த படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு... நடிகர் பார்த்திபன் இயக்கி - நடித்த 'குடைக்குள் மழை' படத்தில் தான் நடிக்க இருந்தாராம்.
நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நயன்தாரா முதலில் வருவதாக கூறிவிட்டு, பின்னர் போன் செய்து என்னால் நேற்று வர முடியவில்லை என்றும், நாளை காலை கண்டிப்பாக வந்து விடுகிறேன் என கூறியுள்ளார். பார்த்திபன் ஏதோ கோபத்தில் இருக்கும் போது நயன்தாரா இப்படி பேச... "இல்ல நீங்க வரவே வேண்டாம்" என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாராம். இந்த தகவலை அவரே சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று கூறியுள்ளார். ஒரு வேலை பார்த்திபனின் குடைக்குள் மழை படத்தில் நயன்தாரா நடித்திருந்தால் அதுதான் அவரது முதல் படமாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவானந்தத்தின் மறுபக்கத்தை கூறிய ஜனனி..! மனம் உடைந்த ஈஸ்வரி..? முன்னாள் காதலன் பற்றி வாய்திறப்பாரா!