அஜித் - ஷாலினி லவ் ஸ்டோரி
அஜித்தும், ஷாலினியும் அமர்க்களம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது, எதிர்பாராத விதமாக ஷாலினியின் கையில் அஜித் வைத்திருந்த கத்தி பட்டு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன அஜித், ஷாலினியை ஆஸ்பத்திரியில் அனுமதித்தது மட்டுமின்றி, அவர் கூடவே இருந்து அக்கறையோடு பார்த்துக் கொண்டாராம். அஜித்தின் இந்த குணம் ஷாலினிக்கு மிகவும் பிடித்துப் போக, அப்போதில் இருந்தே அஜித்மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறி இருக்கிறது.