12 வருட தொடர் தோல்வியில் இருந்து சூர்யாவை மீட்டெடுத்ததா ரெட்ரோ?

Published : May 01, 2025, 02:37 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 12 ஆண்டுகளாக வெளியான படங்கள் தியேட்டரில் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், ரெட்ரோ மூலம் அவர் கம்பேக் கொடுத்தாரா என்பதை பார்க்கலாம்.

PREV
15
12 வருட தொடர் தோல்வியில் இருந்து சூர்யாவை மீட்டெடுத்ததா ரெட்ரோ?

Suriya Comeback in Retro Movie or Not : தமிழ் சினிமாவில் தரமான நடிகர் என லிஸ்ட் எடுத்தால் அதில் சூர்யாவின் பெயர் முன்னிலையில் இருக்கும். ஆரம்ப காலகட்டத்தில் நடிப்பே வரவில்லை, இவரெல்லாம் ஒரு நடிகரா என கிண்டலடித்தவர்கள் முன்னிலையில் இன்று சிறந்த நடிகர் என்று அவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார் சூர்யா. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

25
சூர்யா

ஓடிடி நாயகன் சூர்யா

சூர்யா நடித்து கடைசியாக ஹிட்டான படங்கள் என்றால் அது சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் தான். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. நேரடியாக ஓடிடியில் வெளியாகின. அவர் நடித்து கடைசியாக தியேட்டரில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் என்றால் அது சிங்கம் 2 தான். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.

35
சூர்யா தோல்வி படங்கள்

12 ஆண்டுகளாக தொடர் தோல்வி

சிங்கம் 2 படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிறது. அதன்பின் தியேட்டரில் சூர்யா நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே தோல்வியை தழுவின. இதனால் அவர் எப்போது கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தை மலைபோல் நம்பி இருந்தார் சூர்யா. ஆனால் அப்படம் அவரின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

45
ரெட்ரோ நாயகன் சூர்யா

ரெட்ரோ ரிலீஸ்

இந்நிலையில், கங்குவா தோல்விக்கு பின் அவர் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

55
ரெட்ரோ எப்படி இருக்கு

கம்பேக் கொடுத்தாரா சூர்யா?

இந்நிலையில், ரெட்ரோ படத்தின் முதல் ஷோ முடிந்த உடனேயே ரெட்ரோ படத்தின் ரிசல்டும் தெரியவந்துள்ளது. அதன்படி இப்படம் சூர்யாவின் தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. படத்தின் பிளஸ் ஆக சூர்யாவின் நடிப்பு மற்றும் அவரின் ஆக்‌ஷன் காட்சிகள் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பூஜா ஹெக்டேவுக்கும் அவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் படத்தில் ஹைலைட்டாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இதன்மூலம் 12 வருட காத்திருப்புக்கு பின் ஒருவழியாக சூர்யாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories