தமிழில் சிறுத்தை, வீரம், விஸ்வாசம், விவேகம், வேதாளம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இவரின் உடன்பிறந்த சகோதரரான பாலாவும் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகரான இவர், தமிழிலும் வீரம், தம்பி போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
அம்ருதா சுரேஷை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி விவாகரத்து செய்து பிரிந்த பாலா, செப்டம்பர் 5-ந் தேதியே எலிசபெத் என்பவரை இரண்டாவது செய்துகொண்டார். இவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டாலும், புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், தற்போது இருவருமே விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இதனை நடிகர் பாலா பேஸ்புக் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது உறுதிப்படுத்தினார். இது தனது வாழ்நாளில் மிகவும் வேதனையான நாட்கள் என பாலா தெரிவித்துள்ளார். மறுபுறம் இவரது முதல் மனைவி அம்ருதா சுரேஷ், இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மீண்டும் சறுக்கலை சந்தித்த சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் படத்தின் பின்னடைவுக்கான காரணம் என்ன?