Naane Varuven : ஓடிடிக்கு வரும் 'நானே வருவேன்'..எப்ப இருந்து தெரியுமா?

Published : Oct 23, 2022, 01:40 PM ISTUpdated : Oct 23, 2022, 04:12 PM IST

இந்த படம் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
Naane Varuven  : ஓடிடிக்கு வரும் 'நானே வருவேன்'..எப்ப இருந்து தெரியுமா?

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராகிவிட்ட தனுஷ். ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். அவர் சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம்  வெளியாகியிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படம் திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.  இதை தொடர்ந்து தற்போது தனுஷின் நானே வருவேன் படம் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

24

அதோடு செல்வராகவன் முக்கிய ரோலில் தோன்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு,  சீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  இந்துஜா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான  நானே வருவேன், பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களமிறங்கியிருந்தது. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...இதையும் படியுங்கள்... சர்தார் வசூல்ல பாதி கூட இல்ல... இரண்டாவது நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பிரின்ஸ்

34
naane varuven

அண்ணன் தம்பியென  இருவரில்,  ஒருவர் சைக்கோ கில்லராக இருக்கிறார். இவர்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இறுதியில் சைக்கோ கில்லரின் மகன் செல்வராகவனை கொலை செய்து விடுகிறார். தன்னை போலவே தன் மகனும் உருவாவதை நினைத்து கலைங்கி நிற்கிறார். இத்துடன் இந்த படம் முடிவடைகிறது. இதன் இரண்டாம் பாகமும் காத்திருக்கிறது.

44
naane varuven

ஆனால், தயாரிப்பாளர்கள் கூறியபடி பணம் போதுமான வெற்றி பெறவில்லை என்றும் தோல்வியை சந்தித்ததாகவும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இதன் ஓடிடி அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி இந்த படம் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் சறுக்கலை சந்தித்த சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் படத்தின் பின்னடைவுக்கான காரணம் என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories