தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படமும், கார்த்தியின் சர்தார் திரைப்படமும் திரையரங்குகளில் ரிலீசானது. இதில் பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருந்தார். அதேபோல் சர்தார் படத்தை இரும்புத்திரை படத்தின் இயக்குனரான பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார்.
கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இருவர் நடிப்பிலும் இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், இந்த படங்களும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 21-ந் தேதி இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீசானது.
இந்த இரண்டு படங்களில் அதிகளவு முன்பதிவு பெற்ற படம் என்றால் அது பிரின்ஸ் தான். ஆனால் அப்படம் வெளியாகி முதல் காட்சியின் முடிவிலேயே அதன் ரிசல்ட் தெரிந்துவிட்டது. படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், நிறைய காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகாமல் போனதே படத்திற்கு பெரும் பின்னடைவு என்றும் கூறப்பட்டது.
இதையும் படியுங்கள்... சிம்பு பற்றி இல்ளோ மோசமாவா பேசுறது... சர்ச்சையில் சிக்கிய SK - ‘பிரின்ஸ்’ ஐ பிரித்தெடுக்கும் சிம்பு ரசிகர்கள்
ஆனால் சர்தார் படம் வெளியானது முதலே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி முதல் நாளில் சர்தார் படத்தை விட பிரின்ஸ் படம் அதிக வசூல் ஈட்டி இருந்தாலும், இரண்டாம் நாளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. மோசமான விமர்சனங்கள் காரணமாக பிரின்ஸ் பட வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது.