BiggBoss Elimination: இவங்க லிஸ்டுலையே இல்லையே? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி யாரும் எதிர்பாராத போட்டியாளர்!

First Published | Oct 22, 2022, 10:36 PM IST

பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி வெளியே சென்ற, முதல் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கிய நிலையில், நிகழ்ச்சி துவங்கிய அன்று  மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தனர். ஆனால் 21 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த மைனா கலந்து கொள்ளவில்லை.
 

இதை தொடர்ந்து, கடந்த வாரம்... மைனா வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். மிகவும் துறுதுறுவென விளையாடி வரும் மைனா... உள்ளே வந்த முதல் வாரம் என்பதால், அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: தனுஷை தொடர்ந்து.. புதிய வீடு காட்டும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா! வைரலாகும் வீடியோ..!
 

Tap to resize

எனினும் இந்த இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில்... மொத்தம்  15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இடம்பெற்ற நிலையில் இதில் இருந்து யார் வெளியேறுவார் என்பதில் அதீத குழப்பம் நிலவியது. 

எனினும் இந்த வாரம் நெட்டிசன்கள் கணிப்பின் படி, விக்ரமன் அல்லது தனலட்சுமி வெளியே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில் இந்த லிஸ்டிலேயே இல்லாத போட்டியாளர் தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்றுள்ளார்.

மேலும் செய்திகள்: சரக்கு பக்கத்தில் நின்று மோசமான கிளாமர் உடையில்... முதுகை முழுசாய் காட்டி போதை ஏற்றும் ஷிவானி ஹாட் போட்டோஸ்!
 

பிரபல நடன இயக்குனரான மெட்டி ஒலி சாந்தி தான் இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜிபி முத்துவும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவாரா? அல்லது தொடர்ந்து நீடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகள்: அட சிவகார்த்திகேயன் மகளா இது..? ஹார்ட் ஷேப் கண்ணாடியில்.. அப்பாவுடன் கூலாக போஸ் கொடுத்த ஆராதனா!
 

Latest Videos

click me!