தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படுபவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் அடுத்தடுத்து காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் என வரிசையாக பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனராக கொண்டாடப்பட்டார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்தப் படமும் வெற்றியை ருசிக்கவில்லை.
24
இயக்குனர் ஷங்கர் படங்கள்
அதிலும் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அப்படங்களின் தோல்விக்கு பின்னர் ஷங்கரின் மவுசு குறைந்துவிட்டது. அவர் இன்னும் பழைய காலத்திலேயே இருப்பதாக விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இதனால் தன்னுடைய ரூட்டை மாற்றி வேள்பாரி என்கிற சரித்திர நாவலை மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் ஷங்கர்.
ஷங்கரின் பேமிலியில் இருந்து அவரது மகள் அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் இதுவரை விருமன், மாவீரன், நேசிப்பாயா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். இந்நிலையில், இயக்குனர் ஷங்கரின் மற்றொரு வாரிசும் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் வேறுயாருமில்லை ஷங்கரின் மகன் அர்ஜித் தான்.
44
சிவகார்த்திகேயன் படத்தில் அர்ஜித்
அர்ஜித் ஷங்கருக்கும் தன் தந்தையை போல இயக்குனர் ஆகவேண்டும் என ஆசையாம். இதனால் மகனை இயக்குனராக்கும் வேலையில் இறங்கிய ஷங்கர், அவரை தன்னுடைய ஷூட்டிங்கில் பணியாற்றவிட்டால் சரிவராது என முடிவெடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டாராம். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள மதராஸி திரைப்படத்தில் தான் அர்ஜித் ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதுவே அவர் பணியாற்றிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.