Naga Chaitanya Thandel Box Office Collection Day 10 Report : சோபிதா துலிபாலாவை திருமணம் செய்த நேரம் தண்டேல் ரூ.100 கோடி வசூல் குவித்து நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய வெற்றி படமாக அமைந்துள்ளது.
Naga Chaitanya Thandel Box Office Collection Day 10 Report : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாக சைதன்யா கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சோபிதா துலிபாலாவை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் ஆவணப்படமாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், சோபிதா நாக சைதன்யாவின் திருமண ஆவணப்படத்திற்கு நெட்பிளிக்ஸ் ரூ.50 கோடி வரையில் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
25
சாய் பல்லவி, நாக சைதன்யா
எனினு, இப்போது சோபிதா வந்த நேரம், அவர் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த ராசி நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தண்டேல் படம் உருவாக்கியிருக்கிறது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவான தண்டேல் படம் பிப்ரவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான தண்டேல் படம் சைதன்யாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. சந்து மொண்டேடி இயக்கத்தில், அல்லு அரவிந்த், பன்னி வாசு தயாரித்த இந்தப் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது.
35
சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!
இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. தண்டேல் அரிய சாதனையைப் படைத்துள்ளது. நாக சைதன்யாவை முன்னணி நடிகர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. இந்தப் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வாரம் முடியும் முன்பே, வெளிநாடுகளில் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.10 கோடி) வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
45
சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!
நாக சைதன்யாவின் கடின உழைப்பு, அற்புதமான நடிப்பு, சாய் பல்லவியின் மயக்கும் நடிப்பு, நடனம், வலுவான கதை, மீனவர்களின் யதார்த்த வாழ்க்கை, இசை, தயாரிப்பு மதிப்பு ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன. இயக்குனர் சந்து மொண்டேடி படத்தை உணர்ச்சிபூர்வமாகக் கையாண்ட விதம் படத்தின் சிறப்பம்சமாகும். கிளைமாக்ஸ் முக்கிய பங்கு வகித்தது. படத்தைப் பெரிய வெற்றிப் படமாக்கியது என்று சொல்லலாம்.தண்டேல் படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் கடந்த நிலையில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக பாக்ஸ் ஆபிஸில் கர்ஜித்து வருகிறது. இதுவரையில் எந்தப் படமும் நாக சைதன்யாவிற்கு ரூ.100 கோடி வசூல் குவிக்கவில்லை.
55
சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!
முதல் முறையாக நாக சைதன்யாவின் இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற சாதனையை அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்த நேரம் என்று சொல்லும் அளவிற்கு தண்டேல் ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே தண்டேல் வெற்றிக்கு தன்னுடைய மருமகள் சோபிதா துலிபாலா வந்த நேரம் என்று அவருக்கு நாகர்ஜூனா பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்திற்கு நாக சைதன்யாவிற்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று சாய் பல்லவிக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் கூட ரூ.60 கோடி வரையில் தான் வசூல் குவித்திருந்தது.