Arivumathi: இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் அறிவுமதி! இதெல்லாம் இவர் பாடல்களா?

Published : Feb 17, 2025, 12:39 PM ISTUpdated : Feb 17, 2025, 12:56 PM IST

இசை ஞானி இளையராஜா இசையில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி உள்ள, பாடலாசிரியர் அறிவுமதி பற்றி தெரியுமா? அவர் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
Arivumathi: இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் அறிவுமதி! இதெல்லாம் இவர் பாடல்களா?
விருத்தாசலத்தில் பிறந்த அறிவுமதி:

தமிழ்நாட்டை சேர்ந்த அறிவுமதி, விருத்தாசலத்தில் பிறந்தவர். ஒரு பாடலாசிரியராக மாறுவதற்கு முன்பு இவர் பாரதிராஜா , பாலுமகேந்திரா மற்றும் பாக்யராஜ் போன்ற பல புகழ்பெற்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்பதே இவரது முதல் கனவாக இருந்தது. இயக்குநராக தனது முதல் படத்தை தொடங்க இருந்தார். அதன்படி முதலில் 'உல்லேன் அய்யா' என்கிற படத்தின் அணைத்து பணிகளும் முடிந்து படம் இயக்க போகும் சமயத்தில் இந்த படம் கைவிடப்பட்டது.

26
உதவி இயக்குனராக ஆரம்பமான வாழ்க்கை:

பின்னர் மீண்டும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இணைந்து புது நெல்லு புது நாத்து மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் பணியாற்றினார் . பின்னர் பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தமிழில் 'சிறைச்சாலை' என்கிற பெயரில் மோகன் லாலை வைத்து இயக்கிய, படத்தில் அறிவுமதி வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றினார் . இந்த படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதிய, 'ஆலோலம் கிளி தோப்பிலே, சுட்டும் சுடர் விழி, செம்பூவே பூவே, மன்னன் கூரை சேலை, இது தாய் பிறந்த நாடு, போன்ற 5 பாடல்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

எஸ்பிபியுடன் மோதல்; இளையராஜாவின் மண்ட கர்வம்? பாடகர் வீரமணி கண்ணன் ஓபன் டாக்!

36
பாடல்கள் பேசப்பட்டாலும் அறிவுமதி கவனிக்கப்படவில்லை:

இந்த படத்தின் பாடல்கள் இன்று வரை மிகவும் பிரபலம் என்றாலும், இசைக்காக இளையராஜா அதிகம் பேச பட்டாரே தவிர, இந்த பாடல் வரிகள் பேசப்பட்ட அளவுக்கு, அறிவுமதி பேசப்படாமல் போனார். மேலும் இன்று வரை இவர் எழுதிய பல பாடல்கள், இவருடைய எழுத்தில் வெளியானது என்பதை பலரும் அறியவில்லை.

46
அறிவுமதியின் சூப்பர் ஹிட் பாடல்கள்:

இசைஞானிக்கு பல ஹிட் பாடல்களை எழுதியுள்ள அறிவுமதி எழுதிய சில சூப்பர் ஹிட் பாடல்கள் பற்றி பார்க்கலாம். 'தேவதை' படத்தில் இடம்பெற்ற தீபங்கள் பேசும்..., பிரியமுடன் படத்தில் இடம்பெற்ற ஆகாஷ வாணி நீயே என் ராணி..., தேசிய கீதம் படத்தில் தேசிய கீதம் என தொடங்கும் நாட்டு பற்று பாடல், 'மனம் விரும்புதே உன்னை' இளவேனி கால பஞ்சமி,     'தெனாலி' படத்தில் இடம்பெற்ற அத்தினி சித்தினி, 'தில்' படத்தில் இடம்பெற்ற கண்ணுகுல்லே மற்றும் ஓ நண்பனே... 'அல்லி தந்த வானம்' படத்தில் இடம்பெற்ற     கண்ணாலே மியா மியா, தோம் தோம், அந்தி கருக்கையிலே, தட்டான் கெடக்கலையோ, வாடி வாடி நாட்டுக்கட்டை ஆகிய பாடல்களை எழுதியவர் இவரே.

இளையாராஜாவை விட தேவா எவ்வளவோ பெஸ்ட்: ஏனா அவர் ஒரு பண பைத்தியம்!

56
இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்கள்:

1998-ஆம் ஆண்டு இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில், வெளியான 'கிழக்கும் மேற்கும்' படத்தில் இவர் எழுதிய கத்தூங்குயிலே பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் வென்றார். இதுவும் இளையராஜா இசையில் இவர் எழுதிய பாடலாகும். 

மேலும் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாடல் எழுதியுள்ள இவரை... தற்போதைய இளம் இசையமைப்பாளர்கள் யாரும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே பலரின் ஆதங்கம். திரைப்படங்கள் மட்டும் இன்று சில சீரியல்களுக்கு பாடல் எழுதியுள்ள அறிவுமதி, மழை பேச்சு, நட்பு கலாம், முத்திரை கவிதைகள் , வாலி (கவிதைத் தொகுப்பு), தமிழ் முருகன், ஆயுலின் அந்திவரை போன்ற புத்தகங்களையும் வெளியிட்டுளளார். 
 

66
அறிவுமதி பெயரின் ரகசியம்:

அறிவு மதி, தனது நண்பர்களின் முதல் பெயரான அறிவழகன் என்பதில் "அறிவு" என்றும், தனது சொந்த முதல் பெயரான "மதி" என்பதை தேர்வு செய்தே  "அறிவுமதி" என்கிற பெயரில் பாடல்கள் எழுத துவங்கினார். அறிவுமதிகடைசியாக கடந்த ஆண்டு வெளியான 'அஞ்சாமை' படத்தில் இடம்பெற்ற நீயே நீயே என்கிற பாடலை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories