குருவுக்காக இணைந்த சிஷ்யர்கள்! ஷங்கரின் இந்தியன் 2-வில் இணைந்த மேலும் 3 இயக்குனர்கள்- அட்லீ மட்டும் மிஸ்ஸிங்

Published : Sep 14, 2022, 09:11 AM ISTUpdated : Sep 14, 2022, 12:19 PM IST

Director Shankar : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்க மேலும் 3 முன்னணி இயக்குனர்கள் இணைந்துள்ளனர்.

PREV
14
குருவுக்காக இணைந்த சிஷ்யர்கள்! ஷங்கரின் இந்தியன் 2-வில் இணைந்த மேலும் 3 இயக்குனர்கள்- அட்லீ மட்டும் மிஸ்ஸிங்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் இந்தியன். 25 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டதால் கடந்த 2020-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

24
இயக்குனர் சிம்புதேவன் (இம்சை அரசன் 23-ம் புலிகேசி, புலி, கசடதபற படங்களை இயக்கியவர்)

ஒருகட்டத்தில் இப்படம் கைவிடப்படும் சூழலுக்கே சென்றுவிட்டது. பின்னர் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தூசிதட்டி எடுத்தது. அவர்கள் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படம் உதயநிதி வசம் சென்ற உடன் இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2-வுக்காக தடபுடலாக தயாராகும் ராகவா லாரன்ஸ்... கெட்டப் சேஞ்ச் குறித்து அவரே வெளியிட்ட பதிவு

34
இயக்குனர் அறிவழகன் (ஈரம், வல்லினம், குற்றம் 23, தமிழ்ராக்கர்ஸ் வெப் தொடர் ஆகியவற்றை இயக்கியவர்)

இயக்குனர் ஷங்கர் ராம்சரணின் ஆர்.சி.15 படத்தையும், இந்தியன் 2 படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இதனால் அவர் தனது பணிச்சுமையை குறைக்க ஏதுவாக தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் சிம்புதேவன், அறிவழகன், வசந்த பாலன் ஆகியோரின் உதவியை நாடி உள்ளார். ஷங்கர் அழைத்ததும் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்து பணியாற்றி வருகின்றனர்.

44
இயக்குனர் வசந்த பாலன் (வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர்)

அதன்படி இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். இதர நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகளை சிம்புதேவன், அறிவழகன், வசந்த பாலன் ஆகியோர் எடுக்க உள்ளனர். இதனால் இந்தியன் 2 பட ஷூட்டிங்கும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிசியாக இருப்பதால், அவர் இந்தியன் 2 பட பணிகளில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மாயசேனாவாக சன்னி லியோன்.. தமிழ் கற்றுக் கொடுத்த இயக்குனர்

Read more Photos on
click me!

Recommended Stories