நடிகர் தனுஷ் - இயக்குனர் செல்வராகவன் கூட்டணி என்றாலே படம் சூப்பர் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு, இவர்களது காம்போவில் ரிலீசான காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில், தற்போது 11 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் நானே வருவேன்.
நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. இடையே இப்படத்தின் டிரைலர் வெளியீடு தாமதம் ஆனதால், இப்படத்தின் ரிலீசை தள்ளிவைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக பேச்சு அடிபட்டது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி நானே வருவேன் படத்தின் டீசரை நாளை செப்.15-ந் தேதி வெளியிட உள்ளதாக குறிப்பிட்டு தனுஷின் இரண்டு தோற்றங்கள் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதில் செப்டம்பர் வெளியீடு எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் இப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீசாவது உறுதியாகி உள்ளது. நாளை சிம்புவின் வெந்து தணிந்தது காடு பட ரிலீசாகும் தேதியில் நானே வருவேன் டீசர் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... டுவிட்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ விக்ரம் உடன் சேர்ந்து ‘குந்தவை’ திரிஷா செய்த வேலையை பார்த்தீர்களா...!