கோலிவுட் திரை உலகில், தன்னுடைய படங்களில் பிரம்மாண்ட காட்சிகளை வைத்து, ரசிகர்களை பிரமிக்க வாய்த்த இயக்குனர் ஷங்கர், இன்று தன்னுடைய 60-வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், என அடுத்தடுத்து சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற பின்னர், தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஷங்கர்.
தற்போது இயக்குனர் ஷங்கர் நடிகர் கமலஹாசனை வைத்து பல வருடங்களுக்குப் பின்னர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி உள்ளார். அதே போல் தெலுங்கில் ராம் சரணை ஹீரோவாக வைத்து 'கேம் சேஞ்சர்' என்கிற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்த நிலையில், தற்போது இந்த இரு படங்களின் போஸ் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்துள்ளது மட்டுமின்றி, புதிய தொழில்நுட்பங்களை தனது திரைப்படங்களில் புகுத்தி... ரசிகர்களின் கவனத்தைப் பெற்று அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வரும் இயக்குனர் சங்கருக்கு ஏசியா நெட் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.