Rajinikanth Sun Pictures
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதை அவர் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் பேசியதை வைத்தே அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு ஃபயராக பேசி இருந்தார். ரஜினி ஒரு ரெக்கார்ட் பிரேக்கர் அல்ல ரெக்கார்ட் மேக்கர் என அவர் கூறியது தான் தற்போது ஜெயிலர் படம் மூலம் நிரூபனம் ஆகி உள்ளது. அப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
எந்திரன்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றால் அது எந்திரன் தான். ஷங்கர் இயக்கிய இப்படம் 2010-ம் ஆண்டிலேயே ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ரஜினியும் தன் பங்கிற்கு ரோபோவாகவும், வசீகரனாகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
அண்ணாத்த
ரஜினி - சன் பிக்சர்ஸ் காம்போ சொதப்பிய படம் என்றால் அது அண்ணாத்த தான். சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.175 கோடி மட்டுமே வசூலித்தது.
ஜெயிலர்
அண்ணாத்த படத்தில் மிஸ் ஆன வெற்றியை ஜெயிலர் மூலம் மீட்டெடுத்துள்ளது ரஜினி - சன் பிக்சர்ஸ் காம்போ. இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் தங்கள் காம்போ அலப்பறையான காம்போ என்பதை சன் பிக்சர்ஸும், ரஜினிகாந்தும் மீண்டும் நிரூபித்துள்ளனர். இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் குவித்த படமாக மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கோமாவில் இருந்து கண் விழித்த அப்பத்தா.! கோவத்தில் வார்த்தையை விட்ட குணசேகரன்... நோஸ் கட் செய்த ரேணுகா!