தென்னிந்திய திரையுலகில் நடிகை நயன்தாரா, தான் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். அதையே அவர் ஒரு பாலிசியாவும் வைத்துள்ளார். இதுவரை அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டதில்லை. ஆனால் சமீப காலமாக தனது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான புரமோஷனில் மட்டும் தலைகாட்டி வருகிறார் நயன்.