தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கிய அவரது பயணம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து நூறு சதவீத வெற்றியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதற்கு முன்னதாக அவர் லெக்சஸ் கார் வைத்திருந்தார். அந்த காரை நடிகர் கமல்ஹாசன் தான் பரிசாக வழங்கி இருந்தார். விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றதை அடுத்து தன் அன்பு பரிசாக லெக்சஸ் காரை லோகேஷுக்கு சர்ப்ரைஸாக வழங்கினார் கமல். அந்த லெக்சஸ் காரின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். தற்போது அதற்கு டபுள் மடங்கு பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார் லோகேஷ்.
லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. பெட்ரோல் வேரியண்ட்டான இது ஜீரோவில் இருந்து 100 கி.மீ வேகத்தை 5.4 விநாடிகளில் எட்டிவிடுமாம். ஸ்மார்ட் போன் வசதியுடன் இந்த காரை அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியுமாம். இந்த கார் ஒரு லிட்டருக்கு 12.61 கி.மீ மயிலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 2 மணிநேரத்தில் மலர்ந்த காதல்... சூப்பர்ஸ்டாரின் சூப்பரான லவ் ஸ்டோரி தெரியுமா?