2 மணிநேரத்தில் மலர்ந்த காதல்... சூப்பர்ஸ்டாரின் சூப்பரான லவ் ஸ்டோரி தெரியுமா?

First Published | Aug 17, 2023, 12:13 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதன் பின்னணி பற்றியும், அவர்களது லவ் ஸ்டோரி பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்த ரஜினிகாந்த், சினிமாவிற்குள் நுழைந்து சூப்பர்ஸ்டார் ஆன கதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் லவ் ஸ்டோரியை பற்றி அவர் பெரிதாக பேசியதில்லை. சமீபத்தில் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் தன்னிடம் முதலில் கேட்டது என்னுடைய லவ் ஸ்டோரியை தான் என சொல்லி இருந்தார் ரஜினி. அந்த அளவுக்கு சுவாரஸ்யமானது தான் ரஜினி - லதா ஜோடியின் காதல் கதை. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினியை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர். பின்னர் மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, ஆறிலிருந்து அறுபது வரை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த ரஜினி, மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார். இதையடுத்து ரஜினிக்கு பட வாய்ப்புகள் குவிந்ததால், மனுஷன் நிற்க கூட நேரம் இல்லாமல் பம்பரமாய் சுழன்று வந்தார்.

Tap to resize

இந்த அளவு பிசியான நடிகராக வலம் வந்த ரஜினியை பேட்டி எடுக்கும் வாய்ப்பு லதாவுக்கு கிடைத்திருக்கிறது. சென்னையில் உள்ள எதிராஜ் கல்லூரியில் பயின்றபோது ஒரு நாளிதழுக்காக ரஜினியை பேட்டி எடுக்க வந்திருக்கிறார் லதா. இதற்காக ரஜினியிடம் 20 நிமிடத்திற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிய லதா அவரை சுமார் 2 மணிநேரம் பேட்டி எடுத்தாராம். இந்த 2 மணிநேர பேட்டியிலேயே ரஜினிக்கு லதா மீது காதல் வந்துவிட்டது.

இதையும் படியுங்கள்... இமயமலை பயணம் முடிந்தவுடன் வீட்டுக்கு வராமல்... நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்ற ரஜினி - என்ன விஷயம்?

பேட்டி முடிந்து கிளம்பிய லதாவிடம் தன்னுடைய காதலை சொல்லாமல், நேராக நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்புகிறேன் என விஷயத்தை போட்டுடைத்துள்ளார் ரஜினி. நேருக்கு நேராக அவர் இதைக்கேட்ட விதம் லதாவுக்கு பிடித்துப் போக, பெற்றோரிடம் பேசும்படி கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதன்பின்னர் இவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியவுடன் கடந்த 1981-ம் ஆண்டு லதாவை கரம்பிடித்தார் ரஜினி.

இவர்களது திருமணம் திருப்பதியில் வைத்து நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் குடி மற்றும் சிக்ரெட் பழக்கத்துக்கு அடிமையான ரஜினியை தன் அன்பால் மாற்றி உள்ளார் லதா. இதனை ரஜினியே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். இன்று 72 வயதிலும் ரஜினி சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க லதா தான் காரணம். 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும் லதா மீதுள்ள காதலை இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார் சூப்பர்ஸ்டார். 

இதையும் படியுங்கள்... மொத்த அழகையும் மூடி.. Matrix பட பாணியில் ஒரு சூப்பர் போட்டோஷூட் போட்ட நடிகை மிருணாள் தாகூர்!

Latest Videos

click me!