Jailer Rajinikanth
ரஜினிகாந்த் நடித்த எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், சூப்பர்ஸ்டார் உடன் நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் தான் ஜெயிலர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். ரஜினி உடன் பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் நடித்திருந்ததால், ஜெயிலர் படத்துக்கு இந்தியா முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
Jailer Rajinikanth
ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே சுமார் ரூ.100 கோடி வசூலை நெருங்கிய நிலையில், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால், அப்படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதன்படி இப்படம் துணிவு, வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களின் லைஃப் டைம் கலெக்ஷனை 5 நாட்களில் முந்தி சாதனை படைத்திருந்தது. இதுதவிர இப்படம் ஒரு வாரத்தில் ரூ.450 கோடி வசூலித்து விக்ரம் பட வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வந்தனர்.
இதையும் படியுங்கள்... 2 மணிநேரத்தில் மலர்ந்த காதல்... சூப்பர்ஸ்டாரின் சூப்பரான லவ் ஸ்டோரி தெரியுமா?
Jailer Rajinikanth
மறுபுறம் இந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எல்லாம் நிஜமல்ல உருட்டு என ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு ட்ரோல் செய்து வந்தார். இப்படி ஜெயிலர் பட கலெக்ஷன் பற்றி முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் பரவி வந்ததால், உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிடும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Jailer collection
அதன்படி ஜெயிலர் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.375.40 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வாரத்தில் அதிகளவு வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் என குறிப்பிட்டு இருக்கின்றனர். அதோடு அலப்பறை கிளப்பிட்டோம் என கேப்ஷனும் கொடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இமயமலை பயணம் முடிந்தவுடன் வீட்டுக்கு வராமல்... நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்ற ரஜினி - என்ன விஷயம்?