நடிகர் பிரபுதேவாவோடு "ராசையா" திரைப்பட காலத்திலிருந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் வடிவேலு. பார்த்திபன் வடிவேலு ஜோடிக்கு இணையாக காமெடியில் கலக்குகின்ற ஒரு ஜோடி இருக்கிறது என்றால் அது நிச்சயம் பிரபுதேவா மற்றும் வடிவேலு ஜோடி தான். இவர்களுடைய காம்பினேஷனில் மிஸ்டர் ரோமியோ, லவ் போர்ட்ஸ், மனதை திருடிவிட்டாய் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
இறுதியாக கடந்த 2004ம் ஆண்டு மறைந்த பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் நடிப்பில் வெளியான "எங்கள் அண்ணா" என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்கள். இந்த சூழலில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு நடிகர்களும் ஒன்றாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரபல இயக்குனர் சக்தி சிதம்பரம் இந்த தகவலை கொடுத்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சாம்ராட்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அவர்.