இன்னும் சொல்லப்போனால் பல ஆண் இயக்குனர்களை ஒப்பிடும் பொழுது அவர்களை விட மிகவும் திறன் பட திரைப்படங்களை இயக்கி பெண்கள் பெரிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் இவை அனைத்திற்கும் முதல் முதலில் அஸ்திவாரம்போட்டது டி.பி ராஜலக்ஷ்மி என்கின்ற மாபெரும் நடிகை தான். கடந்த 1911ம் ஆண்டு கும்பகோணத்திற்கு அருகே உள்ள சாலியமங்கலம் என்கின்ற ஊரில் பிறந்தவர் இவர். தனது 11வது வயதிலேயே குடும்ப வறுமையின் காரணமாக திருமண பந்தத்தில் இணைகிறார்.
ஆனால் எளிமையான குடும்பம் என்பதால் சரியாக வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில், ராஜலட்சுமி மீண்டும் அவர்களுடைய குடும்பத்தினரிடமே அனுப்பி வைக்கின்றனர் கணவர் வீட்டில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் வறுமை உச்சிக்கு செல்ல, திருச்சிக்கு பிழைப்பு தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்தார் ராஜலட்சுமி. இளம் வயதிலேயே பாட்டும், நடிப்பும் இவருடைய ரத்தத்தில் ஊறி இருந்திருக்கிறது. திருச்சி சென்றதும் பிரபல நாடக சபா ஒன்றில் இணைந்து நடிகையாக மாறுகிறார். இந்த சூழலில் நான் ராஜலட்சுமிக்கு 20 வயது இருக்கும் பொழுது, தன்னுடன் நடித்து வந்த டிவி சுந்தரம் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.