தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் வகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் மணிரத்னம். அவர் பலவருட கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படம் தான். அந்த படத்தை தற்போது ஒரு வழியாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... பள்ளி மாணவிகளை சந்தித்த கமல் ஹாசன்..வைரலாகும் வீடியோ இதோ
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னம், நடிகை திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின் போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் முதல் பாகம் வெளியான 6 அல்லது 9 மாதங்களுக்கு பின்னர் இரண்டாம் பாகம் ரிலீஸ் செய்யப்படும் என கூறி உள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட பிளான் போட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பிரபல பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்... கத்துவாக்குல மீண்டும் காதல் வலையில் சிக்கிய பிரபாஸ்..!