தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் பான் இந்தியா நடிகராகிவிட்டார். இதனால் தற்போது இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் தயாராகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் பிரபாஸுக்கும், ஆதிபுருஷ் படத்தின் நாயகி கீர்த்தி சனோனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்ற விஷயம் தான் தற்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
நடிகர் பிரபாஸ் இதுபோன்ற காதல் சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. பாகுபலி படத்தில் நடித்தபோது அவரும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஏராளமான வதந்திகள் பரவின. அதேபோல் தற்போது கீர்த்தி சனோன் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி உள்ளார் பிரபாஸ். இந்த காதலாவது பிரபாஸுக்கு கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை ..வெளியானது தற்கொலை கடிதம்