அட்டர் பிளாப் ஆன கேம் சேஞ்சர்; ஆனாலும் ரூ.100 கோடி லாபம் பார்த்த தில் ராஜு! அது எப்படி?

Published : Jan 29, 2025, 02:19 PM IST

பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதிலும், அப்படத்தின் தயாரிப்பாளர் ரூ.100 கோடி லாபம் பார்த்திருக்கிறார்.

PREV
14
அட்டர் பிளாப் ஆன கேம் சேஞ்சர்; ஆனாலும் ரூ.100 கோடி லாபம் பார்த்த தில் ராஜு! அது எப்படி?
தயாரிப்பாளர் தில் ராஜு

தெலுங்கு திரையுலகம் முழுக்க ஒரு சில குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படி வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்த தெலுங்கு சினிமாவில், சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஆரம்பத்தில் விநியோகஸ்தராக பணியாற்றி பின்னர் படிப்படியாக படத் தயாரிப்பில் இறங்கி, இன்று பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் தான் தில் ராஜு.

24
கேம் சேஞ்சர் தில் ராஜு

தில் என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், இதுவரை தயாரித்துள்ள படங்களில் பெரும்பாலும் வெற்றியை தான் ருசித்திருக்கிறார். இவர் தயாரித்தால் அந்த படம் கன்பார்ம் ஹிட் என்கிற இமேஜும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதுமட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும்பாலான திரையரங்குகள் இவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் தில் ராஜு.

இதையும் படியுங்கள்...  ரூ.2000 கோடிக்கு அதிபதியான தில் ராஜூ வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்!

34
தில் ராஜுக்கு 100 கோடி இழப்பு

இவர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன கேம் சேஞ்சர் படத்தை தயாரித்திருந்தார். இப்படம் சுமார் 450 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கிய படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே தலைகீழாக மாறிப்போனது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்களில் படுதோல்வியை சந்தித்த படம் என்றால் அது கேம் சேஞ்சர் தான். இப்படத்தால் தில் ராஜுவுக்கு ரூ.100 கோடி இழப்பு என்றும் கூறப்படுகிறது.

44
தில் ராஜுக்கு 100 கோடி லாபம்

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் ஆன படம் மூலம் அவருக்கு ரூ.100 கோடி லாபமும் கிடைத்திருக்கிறது. அது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். அவர் தயாரித்த மற்றொரு படமான ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ என்கிற திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு ரூ.300 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்துள்ளது. இப்படத்தின் மூலம் தில் ராஜுக்கு ரூ.100 கோடிக்கு மேல் லாபம் கிடைத்திருக்கிறதாம். கேம் சேஞ்சர் படத்தில இழந்ததை சங்கராந்திக்கு வஸ்துனாம் படம் மூலம் அசால்டாக அள்ளி இருக்கிறார் தில் ராஜு.

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு; கேம் சேஞ்சர் தான் காரணமா?

Read more Photos on
click me!

Recommended Stories