அம்மா சத்தியமா சொல்றேன் இது உண்மை! 'குக் வித் கோமாளி' செட்டில் என்ன நடந்தது என கண்ணீரோடு கூறிய ஓட்டேரி சிவா!

First Published | Feb 8, 2023, 4:53 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த முறை, புதிய கோமாளியாக கலந்து கொள்ள இருந்த, ஓட்டேரி சிவா... குடித்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் அழிச்சாட்டியம் செய்ததாகவும், எனவே இவர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் கண்ணீரோடு பகிர்த்துள்ள தகவல், அனைவர் மனதையும் கலங்க செய்துள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக உள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. ஒரு சமையல் நிகழ்ச்சியை கூட இந்த அளவிற்கு காமெடியாகவும், விறுவிறுப்பாகவும் நடத்த முடியுமா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர் நிகழ்ச்சியாளர்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலர் தங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ரசிகர்கள் என கூறுவதையும் அடிக்கடி பார்த்து வருகிறோம். கடந்த சீசனின் போது கூட மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்காக 'குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும்படி கூறுவதாக, இந்த நிகழ்ச்சியின் நடுவரான 'வெங்கடேஷ் பத் கூறியது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

திருமண உடையில்... சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி..! வெட்டிங் போட்டோசை பகிர்ந்த நடிகை குவியும் வாழ்த்து!

Tap to resize

வெற்றிகரமாக மூன்று சீசன்களை நிறைவு செய்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 4 ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் பழைய கோமாளிகளாக இருந்த பாலா, புகழ், இன்னும் சிலருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதால், அவர்கள் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நேரம் கிடைக்கும் போது கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

மேலும் புது கோமாளிகளாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர் ஓட்டேரி சிவா, சிலுமிசம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, சீரியல் நடிகை ரவீனா தாகா, ஆகியோர். மேலும் பழைய கோமாளிகளான சுனிதா, குரோஷி, புகழ், மணிமேகலை ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர்.

வெள்ளை நிற வெட்டிங் கவுனில் தேவதை போல் இருக்கும் கருணாஸ் மகள் டயானா..! வெளியான திருமண போட்டோஸ்..!

இந்நிலையில் முதல் வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டேரி சிவா, இரண்டாவது வாரத்தில் கலந்து கொள்ள வில்லை என்பதால்... அவர் குக் வித் கோமாளி செட்டில் குடித்துவிட்டு அழிச்சாட்டியம் செய்ததாகவும், இதன் காரணமாகவே விஜய் டிவி அவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் தகவல்கள் பரவின.

இது தொடர்பாக தற்போது ஓட்டேரி சிவா கண் கலங்கியபடி கொடுத்துள்ள பேட்டி அனைவருடைய மனதையும் கலங்க செய்துள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, குடிப்பழக்கம் தனக்கு கிடையவே கிடையாது. நான் குடித்துவிட்டு 'குக் வித் கோமாளி' செட்டுக்கு வந்தேன் என்பதில் துளியும் உண்மை இல்லை. சாப்பிட சாப்பாடு கொடுத்தால் வயிறு நிறைய சாப்பிடுவேனே தவிர, ஒரு நாளும் குடித்ததில்லை. என் அம்மா மீது சத்தியமாக இது உண்மை. தற்போது கூட விஷால் சார் ஆபீஸில் தான் இருக்கிறேன் வந்து அவரிடமே கேட்டு பாருங்கள் எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா என்று? என கண்ணீரோடு கூறி உள்ளார்.

53 வயதிலும் இளம் நடிகைகளை கவர்ச்சியில் அலறவிடும் செண்பகமே.. செண்பகமே... பாடல் நிஷாந்தி! ஹாட் உடையில் கூல் போஸ்

மேலும் தன்னுடைய வளர்ச்சியை பிடிக்காத யாரோ சிலர் தான், இது போன்ற வதந்திகளை கிளப்பி விடுவதாகவும்... இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். கண்டிப்பாக மீண்டும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார்.  இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்... "விமர்சனங்களை சந்திப்பவர்கள் தான் அதிகம் பேசப்படுவார்கள், இது பற்றிய விமர்சனங்களை ஒருபோதும் கண்டுகொள்ளாமல் உங்களுடைய வெற்றியில் கவனம் செலுத்துங்கள் என ஓட்டேரி சிவாவிற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

click me!