பெங்களூருவை சேர்ந்தவரான சுகேஷ் சந்திரசேகர், சினிமா பிரபலங்களையும், அரசியல் தலைவர்களையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பண மோசடி செய்தபோது போலீசிடம் வசமாக சிக்கினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலிவுட் நடிகைகள் பலருக்கு பல கோடியில் பரிசுக்களை வாரிவழங்கி, அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சுகேஷ் சந்திரசேகர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான் சுகேஷ் சந்திரசேகருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இருவரும் ஓட்டல் அறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.
இதையும் படியுங்கள்... ஒரே பதிவு... ஒட்டுமொத்த வதந்தியும் குளோஸ்! மீண்டும் லியோ படப்பிடிப்பில் திரிஷா - வைரலாகும் போட்டோ
இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த மோசடி வழக்கில் சமீபத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்று கூறி அறிமுகமானதாகவும், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தனது வாழ்க்கையையே அவர் சீரழித்துவிட்டதாகவும் புலம்பித் தள்ளினார்.
இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிடும் சினிமா விமர்சகரும், ஓவர்சீஸ் சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சைந்து என்பவர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் கர்ப்பமாக்கியதாகவும், பின்னர் ஜாக்குலின் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இதையும் படியுங்கள்... டிஆர்பி-யில் அடிச்சு நொறுக்கும் சுந்தரி சீரியலை தடை செய்யனும்... கிளம்பிய நூதன எதிர்ப்பு