ஒரே பதிவு... ஒட்டுமொத்த வதந்தியும் குளோஸ்! மீண்டும் லியோ படப்பிடிப்பில் திரிஷா - வைரலாகும் போட்டோ

First Published | Feb 8, 2023, 1:27 PM IST

காஷ்மீரில் தற்போது நிலவிவரும் பனிப்பொழிவின் காரணமாக சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பும் ஐடியாவில் உள்ளார்களாம் லியோ படக்குழுவினர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் லியோ படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார் திரிஷா. இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மூணாறிலும் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகின்றனர். இதற்காக கடந்த மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்து சென்றனர். அப்போது நடிகை திரிஷாவும் உடன் சென்றிருந்தார்.

காஷ்மீரில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாளில் நடிகை திரிஷா காஷ்மீரில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியானது. அவர் லோகேஷிடம் சண்டையிட்டு கோபத்தில் சென்னை திரும்பிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. ஆனால் இது உண்மையில்லை என்பதை நடிகை திரிஷாவின் தாயார் உமா சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். இருப்பினும் அவர் காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து தங்கி இருந்தது ஏன் என்கிற கேள்வி எழுந்து வந்தது.

இதையும் படியுங்கள்.... லியோ படத்தில் இருந்து திரிஷா விலகியதாக பரவும் தகவல்... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த நடிகையின் தாய்

Tap to resize

தற்போது அதற்கு விடைகிடைத்துவிட்டது. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறதாம். அந்த குளிரை தாங்க முடியாததால் நடிகை திரிஷா, டெல்லிக்கு வந்து, அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்தாராம். இதையடுத்து தற்போது மீண்டும் காஷ்மீருக்கு கிளம்பி சென்றுள்ளார் திரிஷா. அவர் விமானத்தில் சென்றபோது காஷ்மீர் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சியை விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த ஒரே பதிவு மூலம் லியோ படத்தில் இருந்து தான் விலகியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா.

லியோ படக்குழுவினர் காஷ்மீரில் 2 மாதங்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அங்கு தற்போது நிலவிவரும் பனிப்பொழிவின் காரணமாக சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பும் ஐடியாவில் உள்ளார்களாம். இதனால் அங்கு காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறாராம் லோகேஷ். விரைவில் மிஷ்கினும் லியோ ஷூட்டிங்கில் கலந்துகொள்ள காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்.... காதலர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்! காத்துவாக்குல கசிந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் சூப்பர் அப்டேட்

Latest Videos

click me!