தற்போது அஜித், இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவதாக இணைந்து, AK 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், தனக்கு கிடைத்த ஓய்வு நாட்களை அஜித் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.