ரிலீசுக்கு முன்பே கோடிகளைக் குவிக்கும் குபேரா! ஓடிடி உரிமம் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

Published : May 19, 2025, 01:46 PM IST

ராஷ்மிகா மந்தனா, தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் டிஜிட்டல் உரிமைகளை அமேசான் பிரைம் ஓடிடி உரிமையை பெரும் தொகையை வாங்கியுள்ளது.

PREV
14
Kuberaa Movie OTT Rights

நடிகர் தனுஷ் நடிக்கும் 'குபேரா' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கோடிக்கணக்கில் வசூலித்துள்ளது. சேகர் கம்முலா இயக்கியுள்ள படத்தின் டிஜிட்டல் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் படத்தின் பாதி பட்ஜெட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ரன்பீர் கபூருடன் 'அனிமல்', அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2: தி ரூல்', விக்கி கௌஷலுடன் 'சாவா' போன்ற படங்களில் நடித்த ராஷ்மிகா, 'குபேரா' படத்தில் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார்.

24
'குபேரா' டிஜிட்டல் உரிமைகளை வாங்கியது யார்?

'குபேரா' படத்தின் டிஜிட்டல் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி நிறுவனம் தான் வாங்கி உள்ளது. ரூ.50 கோடி கொடுத்து குபேரா பட ஓடிடி உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளதாம். இந்த ஒப்பந்தம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ஓடிடி ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திரையரங்குகளில் படம் ஓடி முடிந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் குபேரா திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அப்படம் ஓடிடியில் வெளியாகும்.

34
'குபேரா' படத்தின் பட்ஜெட் எவ்வளவு, எப்போது வெளியாகும்?

'குபேரா' தனுஷின் திரைப்பயணத்தில் மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாகும். இந்தப் படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷ், ராஷ்மிகா மந்தனா தவிர, நாகார்ஜுனா, ஜிம் சர்ப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் ஜூன் மாதம் 20ந் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக இது வெளியாகும். குபேரா படத்தில் தனுஷ் தேவா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

44
ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படங்கள்

ராஷ்மிகா மந்தனாவின் திரைப்பயணம் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அவரது முந்தைய படமான 'சிகந்தர்' தோல்வியடைந்தாலும், அதற்கு முன்பு அவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார். இந்த ஆண்டு 'சிகந்தர்' தவிர, 'சாவா' படத்திலும் நடித்திருந்தார். அடுத்து 'குபேரா' படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு 'தி கேர்ள்ஃப்ரெண்ட்', 'தமா' ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories