நடிகர் சூர்யாவின் 46வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கடைசியாக சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்த ஜிவி, சுமார் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சூர்யா உடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டார்.
24
சூர்யாவுக்கு ஜோடி யார்?
சூர்யா 46 திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பதையும் அறிவித்து உள்ளனர். அதன்படி பிரேமலு பட நாயகி மமிதா பைஜு தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவர்கள் இருவரும் பாலா இயக்கிய வணங்கான் படத்திலேயே நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்படம் டிராப் ஆனதால் இந்த கூட்டணி கைகூடாமல் போனது. தற்போது சூர்யா 46 படத்துக்காக இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர்.
34
சூர்யா - மமிதா பைஜு வயது வித்தியாசம்
நடிகை மமிதா பைஜுவை விட நடிகர் சூர்யா 27 வயது மூத்தவர். கிட்டத்தட்ட சூர்யா தன் மகள் வயது நடிகையுடன் தான் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். சூர்யா 46 திரைப்படத்தில் நடிகைகள் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் படத்தொகுப்பாளராக நவின் நூலி பணியாற்றுகிறார். ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்து உள்ளனர்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ரெட்ரோ. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிடப்பட்டு உள்ளது.