Dhanush : பீஸ்ட் மோடுக்கு மாறும் அசுரன்... நெல்சனின் அடுத்த டார்கெட் தனுஷ்!

Published : Apr 23, 2022, 09:23 AM IST

Dhanush : நடிகர் தனுஷ் அடுத்ததாக பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. 

PREV
14
Dhanush : பீஸ்ட் மோடுக்கு மாறும் அசுரன்... நெல்சனின் அடுத்த டார்கெட் தனுஷ்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

24

அதேபோல் திருச்சிற்றம்பலம் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

34

இதுதவிர தனுஷ் கைவசம் உள்ள மற்றொரு படம் வாத்தி. பிரபல டோலிவுட் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44

இந்நிலையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. தற்போது ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கி வரும் நெல்சன், இப்படத்தை முடித்த பின்னர் தனுஷுடன் கூட்டணி அமைப்பார் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... Naga chaitanya : சமந்தாவை இன்னும் விவாகரத்து செய்யவில்லை.... புது குண்டை தூக்கிபோட்ட நாக சைதன்யா

Read more Photos on
click me!

Recommended Stories