நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். 4 ஆண்டுகள் சுமூகமாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.