ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் இந்தியன். இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தான் நாயகனாக நடிக்கிறார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்கினர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இறுதியில் உதயநிதி ஸ்டாலின் தற்போது இணை தயாரிப்பாளராக இப்படத்தில் நுழைந்த பின்னர் இந்தியன் 2 பட பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான நடிகை காஜல் அகர்வாலுக்கு, தற்போது குழந்தை பிறந்துள்ளதால், அவர் இப்படத்தில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்த்து நீடித்து வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோனேவை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியானால் கமலுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இந்தியன் 2 அமையும்.
இதையும் படியுங்கள்... டல் விமர்சனமாக இருந்தாலும் வசூலில் டாப்..! சரவணன் அருளின் 'தி லெஜெண்ட்' ! 6 நாள் இத்தனை கோடியா?