நாட் ரீச்சபிள் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பெரிய நடிகர்களை தாக்கி பேசி இருந்தார். அவர் பேசியதாவது : “தற்போதைய காலகட்டத்தில் சினிமாவை காப்பாற்றுவது சின்னப்பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய பெரிய ஹீரோக்கள் அவங்கவுங்க பிழைக்க தான் பார்க்கிறார்கள்.
அவர்கள் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறார்கள் அது என்னவென்றால், அவர்கள் எடுப்பது தமிழ் படம், அதில் நடிப்பது தமிழ் நடிகர்கள், அதைப்பார்க்கப் போகிற ரசிகர்களும் தமிழர்கள், ஆனால் ஷூட்டிங் ஃபுல்லா மும்பையிலும் ஐதராபாத்திலும் நடத்துறாங்க. அவர்கள் இப்படி செய்தால் நம் தமிழ் நாட்டில் உள்ள சினிமா தொழிலாளர்கள் எப்படி பிழைக்க முடியும்.
கேரவனில் இருந்து அருகில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதற்கு 7 பவுன்சர்கள் வேற வச்சிக்கிறாங்க. அப்படி என்ன தப்பு பண்ணீட்டிங்க. நீங்கெல்லாம் என்ன பயங்கரவாதியா. இப்போதைய காலகட்டத்தில் படம் எடுப்பது பெரிதல்ல. என்னென்னவோ கஷ்டப்பட்டு ஷூட்டிங்கை முடிச்சிடுறாங்க. ஆனா ரிலீஸ் பண்ணுவது தான் ரொம்ப கஷ்டமாக உள்ளது.