இயக்குனர் ஜெடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில், ஜூலை 28 ஆம் தேதி வெளியான 'தி லெஜெண்ட்' திரைப்படம் ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதிலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதே நேரம் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சரவணன் அருள் கூறி இருந்தாலும், கதைக்களம் வீக்காக இருப்பது தான் படத்தின் பின்னடைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
the legend
தொழிலதிபர் சரவணனின் தி லெஜண்ட் படத்தின் டிரெய்லர் மே 29 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. சரவணன் லெஜண்ட் சரவணன் என்று அழைக்கப்படுகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜோடியான ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஊர்வசி ரவுத்தேலா, சுமன், கீதிகா, புகழ், பிரபு, மறைந்த விவேக், விஜயகுமார், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா மற்றும் நாசர் உள்ளிட்ட நடிகர்கள் குழுமத்தில் நடித்துள்ளனர்.