நான் மவுத் பீஸ் கிடையாது; பிக் பாஸில் தீபக் மனைவி சொன்ன மேட்டரால் வெடவெடத்துப் போன அருண்

First Published | Dec 24, 2024, 10:26 AM IST

Bigg Boss Freeze Task : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும் நிலையில், அதில் முதல் ஆளாக தீபக்கின் மனைவி மற்றும் மகன் எண்ட்ரி கொடுத்தனர்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அந்நிகழ்ச்சியின் 8வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்கை வைத்துள்ளார் பிக் பாஸ். இதில் போட்டியாளர்களின் உறவினர்களும், நண்பர்களும் வீட்டுக்குள் செல்வார்கள்.

Bigg Boss Freeze Task

அந்த வகையில் இந்த சீசனில் முதல் ஆளாக தீபக்கின் பேமிலி தான் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளது. காலையிலேயே ஸ்டோர் ரூம் வழியாக நைஸாக வீட்டுக்குள் சென்ற தீபக்கின் மனைவியும், மகனும், நேராக பெட்ரூமுக்குள் சென்று தீபக்கின் அருகே படுத்துக் கொண்டனர். பின்னர் தீபக் கண்விழித்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் போட்டியாளர்களை பற்றிய தனது பார்வையை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார் தீபக் மனைவி.

Tap to resize

Arun Prasath

இதையடுத்து லிவ்விங் ஏரியாவில் தீபக் மனைவிக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்த பிக்பாஸ், எந்த போட்டியாளரின் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு கூறினார். சிறிது நேரம் யோசித்த பின்னர், அருண் பிரசாத் என்று கூறிய தீபக் மனைவி, அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீபக் உடன் சண்டையிட்டு வெளியே சென்று சத்யாவிடம் சொன்ன வார்த்தை தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறினார்.

இதையும் படியுங்கள்... சிங்கம் போன்ற கர்ஜனையோடு பிக்பாஸுக்கே குரல் கொடுப்பது யார் தெரியுமா?

Deepak Wife in Bigg Boss Freeze Task

தீபக் உடனான சண்டைக்கு பின் கார்டன் ஏரியாவிற்கு சென்று சத்யாவிடம் பேசும்போது, நான் இப்போ டிரெண்டிங்ல இருக்க ஹீரோ, என்கிட்டயே இப்படி நடந்துக்கிறாரு. அப்போ அவர் டிரெண்டிங்ல இருக்கும்போது அவருடைய அசிஸ்டண்ட் கிட்ட எப்படி நடந்திருப்பார் என்று பேசி இருந்தார். அது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறிய தீபக்கின் மனைவி, அவர் உண்மையில் அப்படி கிடையவே கிடையாது என தெரிவித்தார். 

Deepak Wife advice to Arun Prasath

தொடர்ந்து பேசிய தீபக் மனைவி, உங்களுக்கு தீபக்கின் பர்சனல் லைஃப் தெரியாது. அவர் யாரையும் அப்படி தவறாக நடத்தி நீங்கள் பார்த்ததில்லை. நீங்கள் யூகித்து சொன்ன ஒரு விஷயம் தான் அது. எனக்கு அது அவரது கேரக்டரை கொச்சைப்படுத்தும் ஒரு செயலாக தான் தெரிந்தது என அவர் சொன்னதைக் கேட்டு அருண் வெடவெடத்துப் போனார். இதனால் இன்றைய எபிசோடில் செம சம்பவம் காத்திருக்கு என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை படைத்த ஜாக்குலின்

Latest Videos

click me!