நடிகர் சூர்யாவுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் தன் நீண்ட நாள் காதலியான நடிகை ஜோதிகாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் போது சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, தன் காதல் கணவருக்காக தனது கெரியரையே உதறித்தள்ளினார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர்.
24
Suriya, Jyothika
மகன், மகள் இருவருமே வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார் ஜோதிகா. சென்னையில் தன் தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி உடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த சூர்யா, கடந்த ஆண்டு மும்பையில் செட்டில் ஆனார். தனது மகன் தேவ் மற்றும் மகள் தியாவின் படிப்புக்காக தாங்கள் இருவரும் மும்பையில் குடியேறிவிட்டதாக சூர்யா, ஜோதிகா இருவரும் விளக்கம் அளித்தனர்.
தன் பிள்ளைகள் மீது அதீத பாசம் வைத்துள்ள சூர்யா, அவர்கள் பெயரில் தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 2டி என பெயரிட்டுள்ள அந்த நிறுவனத்தில் தன் மகன் மகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்தை தான் 2டி என குறிப்பிட்டிருக்கிறார் சூர்யா. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சூர்யாவும், ஜோதிகாவும் தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
44
Suriya Jyothika Family Photo
இந்த நிலையில் சூர்யாவின் பேமிலி போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது. அதில் சூர்யாவின் மகன், மகள் இருவருமே தற்போது மளமளவென வளர்ந்துவிட்டதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சூர்யாவின் மகன் தேவ், தன் தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்திருக்கிறார். அதேபோல் சூர்யாவின் மகள் ஜோதிகா சினிமா ஹீரோயின் போல் காட்சியளிக்கிறார். இவர்கள் இருவரும் அண்மையில் தங்கள் பெற்றோருடன் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது பேமிலியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.