Deepak
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மாற்றங்களுடன் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த முறை பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற கான்செப்ட்டில் நடத்தப்பட்டது. முதல் சில வாரங்கள் வீட்டுக்கு நடுவே கோடு போட்டு பாய்ஸ் ஒரு புரமும், கேர்ள்ஸ் ஒரு புறமும் விளையாடி அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் நாளடைவில் அதற்கு மவுசு இல்லை என்பதை உணர்ந்த பிக் பாஸ் கோட்டை அழித்து அனைவரும் ஒன்றாக விளையாடலாம் என அறிவித்தார்.
Bigg Boss Tamil season 8 contestants
அந்த கோட்டை எடுத்த பின்னர் தான் இந்த சீசனில் ஆட்டமே சூடுபிடித்தது. இதில் பல்வேறு தடைகளை கடந்து வந்த ரயான், கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக பைனலுக்குள் நுழைந்தார். இதனால் எஞ்சியுள்ள தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், விஷால், செளந்தர்யா, பவித்ரா, அருண் ஆகிய 7 போட்டியாளர்கள் இடையே தான் இறுதிப்போட்டிக்குள் நுழைய கடும் போட்டி இருந்து வந்தது.
இதையும் படியுங்கள்... அருண் பிரசாத்துக்கு பிக் பாஸ் அள்ளி கொடுத்த சம்பளம்; ஆத்தாடி இத்தன லட்சமா?
Deepak Eliminated
இதில் இந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் 2 பேர் எலிமினேட் செய்யப்பட்டு எஞ்சியுள்ள 6 பேர் பைனலுக்கு தகுதி பெற்றனர். அந்த வகையில் இந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் அருண் பிரசாத் மற்றும் தீபக் எலிமினேட் ஆகி உள்ளனர். எஞ்சியுள்ள பவித்ரா, செளந்தர்யா, முத்துக்குமரன், ஜாக்குலின், ரயான், விஷால் ஆகிய 6 பேர் பைனலிஸ்ட் ஆக தேர்வாகி உள்ளனர். இந்த வாரம் பவித்ரா, விஷால் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அருண், தீபக்கின் எலிமினேஷன் மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்தது.
Deepak Salary
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் ஸ்ட்ராங் ஆன போட்டியாளராக இருந்து எலிமினேட் ஆகி இருக்கும் தீபக், எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. அவர் ஒட்டுமொத்தமாக இருந்த 99 நாட்களுக்கு சேர்த்து அவருக்கு ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்களில் தீபக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... எதிர்பாராத எலிமினேஷன்; டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்!