பாலய்யாவாக மாறும் விஜய்! தளபதி 69 பட சீக்ரெட்டை பொசுக்குனு போட்டுடைத்த பிரபலம்

First Published | Jan 12, 2025, 9:32 AM IST

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்று விடிவி கணேஷ் ஓப்பனாக கூறி இருக்கிறார்.

Thalapathy 69 Update

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், மமிதா பைஜு, பாபி தியோல், டீஜே அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.

Bhagavanth Kesari Remake Thalapathy 69

தளபதி 69 படம் தான் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த `பகவந்த் கேசரி` படத்தின் ரீமேக் என்று வதந்திகள் பரவின. ஆனால் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ரீமேக் விவகாரம் பற்றி நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷ், தெலுங்கு பட விழா ஒன்றில் பேசி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... கைப்புள்ள உஷாராதாம்பா இருக்காரு! அஜித் - விஜய் குறித்த கேள்விக்கு ரிபீட் மோடில் தெறிக்கவிட்ட வடிவேலு!

Tap to resize

VTV Ganesh

அனில் ரவிபுடி இயக்கிய `சங்கராந்திக்கு வஸ்துன்னாம்` என்கிற படத்தில் நடித்துள்ள விடிவி கணேஷ், அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், அனில் ரவிபுடி எவ்வளவு பெரிய இயக்குனர் என்பதைச் சொல்லி, `பகவந்த் கேசரி` பட ரீமேக் விஷயத்தை வெளியிட்டார். பகவந்த் கேசரி படத்தை நடிகர் விஜய் ஐந்து முறை பார்த்தாராம். அவருக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்ததாக என்னிடம் தெரிவித்தார். அதனால் அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டிய விஜய், அதை இயக்க அனில் ரவிபுடியிடம் கேட்டாராம்.

Vijay, AnilRavipudi

ஆனால் அனில்ரவிபுடி அதை மறுத்துவிட்டதாக கூறி விடிவி கணேஷ், விஜய்யுடன் படம் பண்ண இயக்குனர்கள் எல்லாம் வரிசையில் நிற்கிறார்கள், ஆனால் அனில் ரவிபுடி அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறியதாக சொல்லி ஆதங்கப்பட்டார். அப்போது விடிவி கணேஷிடம் இதுபற்றி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்ட அனில் ரவிபுடி, விஜய்யுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தது உண்மை தான், அவர் மிகவும் நல்ல மனிதர், ஒரு முறை சந்தித்தாலே அவர் யார், அவரது பெருமை என்ன என்பது புரியும். விஜய் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது ரீமேக்கா இல்லையா என்பதை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றார்.

VTV Ganesh, Anil Ravipudi

ரீமேக் என்பதை படக்குழு அறிவிக்கும், நான் சொல்ல முடியாது என்று அனில் ரவிபுடி மறைமுகமாகத் தெரிவித்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், விஜய் போன்ற மாஸ் ஹீரோவின் படத்தை இயக்க வாய்ப்பு வந்தால் யார் வேண்டுமானாலும் விட்டுவிடுவார்களா? ஆனால் அனில் ரவிபுடி ஏன் விட்டார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அனில் ரவிபுடி அதிக சம்பளம் கேட்டதால் அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இதனால் அனில் ரவிபுடி விலகி, அப்படத்தை எச். வினோத்திடம் விஜய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பொங்கல் ஸ்பெஷலாக டிவியில் இத்தனை புதுப்படங்கள் ஒளிபரப்பாகிறதா? முழு லிஸ்ட் இதோ

Latest Videos

click me!