Vanangaan vs Game Changer
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அவர் இயக்கத்தில் கடந்த 7 ஆண்டுகளாக எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில், தற்போது வணங்கான் திரைப்படம் மூலம் ரீ.எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து இயக்கிய பாலா, பின்னர் அவரை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக இருந்ததால், அவரை நீக்கிவிட்டு அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்தார்.
Vanangaan
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள முதல் படம் வணங்கான். இப்படத்தில் அருண் விஜய் கோட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 10ந் தேதி திரைக்கு வந்தது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பஞ்சர் ஆன கேம் சேஞ்சர்; 2ம் நாள் வசூல் இவ்வளவுதானா?
Bala, Arun VIjay
வணங்கான் திரைப்படத்துக்கு போட்டியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் ரிலீஸ் ஆனது. இது பான் இந்தியா படம் என்பதால் இப்படத்திற்கும் தமிழ்நாட்டில் அதிகப்படியான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் கேம் சேஞ்சர் படத்துக்கு தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் கிடைத்த வரவேற்பை காட்டிலும் தமிழில் மிகவும் கம்மி தான். இப்படம் இரண்டாம் நாளில் வெறும் ரூ.1.7 கோடி மட்டுமே தமிழ்நாட்டில் வசூலித்து இருந்தது.
Vanangaan Box Office Collection
ஆனால் வணங்கான் படம் முதல் நாளில் வெறும் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இரண்டாம் நாளில் வசூல் பிக் அப் ஆகி உள்ளது. அதன் படி இரண்டாம் நாளில் இப்படம் ரூ.2 கோடி வசூலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாம் நாள் வசூலைவிட வணங்கான் பட வசூல் அதிகம். தற்போது வரை ரூ.3.5 கோடி வசூலித்துள்ள வணங்கான் திரைப்படம் அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பொங்கல் வின்னர் ஆனாரா மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ