லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்த நடிகை ரச்சிதா ராம், தனது திருமணம் பற்றி மனம்திறந்து பேசி உள்ளார்.
'கூலி' படத்தில் ரச்சிதா ராம் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ரஜினிகாந்த், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இப்படத்தில், கல்யாணி என்ற தந்திரமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். 'கூலி' படத்தில் இவரது கதாபாத்திரம் பல திருப்பங்களைக் கொண்டது. ஆரம்பத்தில் சிறிய பாத்திரமாகத் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் படத்தின் முக்கிய வில்லியாக இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ரச்சிதா ராம் முதல்முறையாக வில்லி வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
24
ரச்சிதா ராம் பிறந்தநாள்
இன்று டிம்பிள் குயின் ரச்சிதா ராமின் பிறந்தநாள். 33 வயதாகும் ரச்சிதா ராம் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். அவரது திருமணம் பற்றி ரசிகர்களுக்கு எப்போதும் கவலை உண்டு. அதனால் எங்கு சென்றாலும் அதுபற்றி கேள்வி கேட்கப்படுகிறது. இன்று ரச்சிதா ராம் தனது ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதாக அறிவித்திருந்தார்.
34
ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
நேற்று இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். உங்கள் அன்பு, ஆதரவு, அக்கறைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அக்டோபர் 3 அன்று என் வீட்டின் அருகே இந்த சிறப்பு நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன். இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல, நம் உறவின் கொண்டாட்டம், உங்கள் அன்பின் ரச்சு என்று எழுதியிருந்தார்.
இதனால் இன்று ரசிகர்கள் கூட்டம் அவர் வீட்டின் முன் குவிந்தது. அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை அளித்த பதிலைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா? என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். நிச்சயமாக திருமணம் செய்வேன். பெற்றோரிடம் கூறியுள்ளேன், அவர்களும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டனர். யார் என்றாலும் சரி, கடவுள் யாரை அனுப்புகிறாரோ அவரை ஏற்றுக்கொள்வேன் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், முதல்முறையாக பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை கூறினார். பிறந்தநாளை முன்னிட்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.