தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் கடந்த அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் ஆன நிலையில், அதன் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தனுஷ் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள படம் 'இட்லி கடை'. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தனுஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
24
வசூலில் சொதப்பும் இட்லி கடை
இட்லி கடை திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இட்லி கடை உருவாகி உள்ளது. இப்படத்திற்கு பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌசிக் பணியாற்றி உள்ளார். ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, ஸ்டண்ட் மாஸ்டர் பி.சி. ஸ்டண்ட்ஸ், டான்ஸ் மாஸ்டராக பாபா பாஸ்கர், ஆடை வடிவமைப்பாளராக காவ்யா ஸ்ரீராம் என இப்படத்தின் டெக்னிக்கல் குழுவும் மிக ஸ்ட்ராங் ஆக அமைந்திருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பெரியளவு சோபிக்கவில்லை.
34
இட்லி கடை பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி வெளியான முதல்நாளில் உலகளவில் 15 கோடி வசூலித்த இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.12.65 கோடி வசூலை குவித்திருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இட்லி கடை திரைப்படம் 8.29 கோடி வசூல் செய்திருந்தது. தனுஷ் போன்ற மாஸ் நடிகருக்கு இது மிகவும் கம்மியான வசூலாகவே கருதப்படுகிறது. இரண்டாம் நாளிலாவது வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்த்திருந்த படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. முதல் நாள் தமிழ்நாட்டில் 8.29 கோடி வசூல் செய்த இப்படம் இரண்டாம் நாளில் வெறும் 7 கோடி மட்டுமே வசூலித்தது. உலகளவிலும் நேற்று மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் ரூ.26 கோடி வசூலித்திருக்கிறது.
இட்லி கடை படத்தின் வசூல் சரிவுக்கு முக்கிய காரணம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தான். ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பான் இந்தியா படமாக நேற்று ரிலீஸ் ஆனது காந்தாரா சாப்டர் 1. அப்படத்திற்கு இந்திய அளவில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், இட்லி கடைக்கு மவுசு குறைந்துவிட்டது. நேற்று ரிலீஸ் ஆன காந்தாரா திரைப்படம் முதல் நாளே இந்திய அளவில் ரூ.60 கோடியும், உலகளவில் 80 கோடியும் வசூலித்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் காந்தாரா ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன்மூலம் மக்கள் இட்லி கடையை காட்டிலும் காந்தாராவுக்கே ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது தெரிகிறது.