எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், தர்ஷன் - அன்புக்கரசி இடையேயான திருமணத்தை ஜனனி தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், அறிவுக்கரசியை போலீஸ் கைது செய்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் ஆதி குணசேகரன் தீவிரமாக இருக்கும் நிலையில், அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் ஜனனி மற்றும் ஜீவானந்தம் செயல்பட்டு வருகிறார்கள். ஆதி குணசேகரன் தங்களை கொல்ல முயன்ற போதிலும் அதில் சிறிய காயங்களுடன் தப்பித்துவிட்டார் ஜனனி. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜனனி, தர்ஷன் உடன் பார்கவியை சேர்த்துவிட வேண்டும் என்பதால், வலியையும் தாங்கிக் கொண்டு கல்யாண மண்டபத்துக்கு கிளம்புகிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷனின் கல்யாணத்தை நிறுத்தும் போலீஸ்
தர்ஷனின் கல்யாண நேரம் நெருங்க, நெருங்க தான் நினைச்சது நடக்கப் போகிறது என்கிற மிதப்பில் இருக்கிறார் ஆதி குணசேகரன். கல்யாணத்துக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது நாம் ஜெயிச்சிட்டோம் என கதிர் சொல்ல, அந்த நேரத்தில் கல்யாண மண்டபத்துக்குள் போலீஸ் உடன் மாஸ் ஆக எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. உள்ளே வரும் போலீசார் இங்கு கொலை நடந்திருப்பதாகவும் அதனால் இந்த கல்யாணத்தை நிறுத்த வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்ட ஆதி குணசேகரன் இங்க கொலையா? என்ன சொல்றீங்க... யார் அதை செய்தது என போலீசிடம் கேட்கிறார்.
34
கைது செய்யப்படும் அறிவுக்கரசி
அதற்கு போலீசார் அறிவுக்கரசியை கைகாட்டுகின்றனர். அவர் இங்கு வீடியோ எடுக்க வந்த கேமராமேனை கத்தியால் குத்தி கொன்ற விஷயத்தை கூறுகின்றனர். இதனால் தாங்கள் அறிவுக்கரசியை கைது செய்ய வந்திருப்பதாக சொல்கிறார்கள். கையும் களவுமாக சிக்கிவிட்டதால், தான் கெவினை கொலை செய்த விஷயத்தை ஒப்புக் கொள்கிறார் அறிவுக்கரசி, அதுமட்டுமின்றி ஆதி குணசேகரனை பார்த்து, இந்த ஆளுக்காக தான் கெவினை கொன்றதாக சொல்கிறார். இதைக்கேட்ட அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அறிவுக்கரசி செய்த இந்த வேலையால் தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணமும் நிறுத்தப்படுகிறது.
அறிவுக்கரசி தான் கொலை செய்ததே ஆதி குணசேகரனுக்காக தான் என்று சொன்னதால், அவர் குணசேகரனின் வீடியோ விவகாரத்தை லீக் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆதி குணசேகரனும் கலக்கத்தில் உள்ளார். மறுபுறம் இந்த இறுதி யுத்தத்தில் ஆதி குணசேகரனை வீழ்த்திய சந்தோஷத்தில் ஜனனி உள்ளார். இதையடுத்து ஈஸ்வரி ஆசைப் பட்டபடி தர்ஷனுக்கும், பார்கவிக்கும் கல்யாணத்தை நடத்தி வைத்தார்களா? ஆதி குணசேகரனின் அடுத்த திட்டம் என்ன? அறிவுக்கரசியின் ஆட்டம் முடிந்ததா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் விரிவாக பார்க்கலாம்.