விஜய்க்கு.. சத்யராஜ் மகள் கடும் எதிர்ப்பு..! விஜய்யை அசைக்க கூட முடியாது என மகன் சிபிராஜ் கொக்கரிப்பு

Published : Oct 03, 2025, 11:04 AM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சத்யராஜ் மகள் திவ்யா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சத்யராஜ் மகன் சிபிராஜ், விஜய்யை ஆதரித்து பதிவிட்டு வருகிறார்.

PREV
Sibiraj Support TVK Vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அவருக்கு சினிமா பிரபலங்கள் மத்தியில் பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஒரு சினிமா குடும்பத்தில் விஜய்யை மகள் எதிர்க்க, மகன் ஆதரவு தெரிவித்து வருகிறார். அது வேறுயாருமில்லை நடிகர் சத்யராஜ் ஃபேமிலி தான். சத்யராஜ் குடும்பத்தில் அவரது மகள் திவ்யா சத்யராஜ், கடந்த ஆண்டு திமுக-வில் இணைந்த பின்னர், நடிகர் விஜய்யை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். அதே வேளையில் சத்யராஜ் மகன் சிபிராஜ், விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக இருக்கும் திவ்யா சத்யராஜ், சமீபத்தில் விஜய்யை விமர்சித்து பேசி இருந்தார். விஜய்யின் பாடிகார்டுகள் விஜய்யின் வேனில் இருந்து ஒரு தவெக தொண்டரை தூக்கி வீசிய வீடியோவை பற்றி பேசிய அவர், உங்கள் தொண்டனை பார்த்து பயப்படாதீர்கள். தொண்டர்களை பார்த்து பயப்படுபவர்கள் உண்மையான தலைவனே இல்லை. தொண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவன் தான் உண்மையான தலைவன். மக்களை ஆள வேண்டும் என நினைப்பவர் உண்மையான தலைவன் கிடையாது. மக்களுக்காக பல வருடங்களாக வாழ்பவர் தான் உண்மையான தலைவன் என பேசி இருந்தார்.

விஜய்யை ஆதரிக்கும் சிபிராஜ்

இப்படி திவ்யா சத்யராஜ் விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிகர் விஜய் பேசிய சினிமா டயலாக் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் என்னை மட்டுமில்ல, என்னோட இமேஜை கூட உங்களால ஒன்னும் பண்ண முடியாது என சவால்விடும் விதமாக விஜய் பேசி இருக்கிறார். விஜய்க்கு ஆதரவாகவும், விஜய்யை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் சிபிராஜ் பதிவிட்டுள்ள இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

குடும்பமே எதிர்த்தாலும், விஜய்க்கு சப்போர்டாக நிற்கும் சிபிராஜுக்கு தவெகவினர் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் கரூரில் விஜய்யின் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட வீடியோவில் ச்ச்சீ என ஆவேசமாக கூறி தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார் சத்யராஜ், அதேபோல் அவரின் மகள் திவ்யாவும் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது சிபிராஜ் தளபதிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories